Indian Wrestler Chirag Chikkara (Photo Credit: @kreedonworld X)

அக்டோபர் 28, அல்பேனியா (Sports News): இந்திய மல்யுத்தக் குழு U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2024-யில் ஒரு தங்கம், வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளது. U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (U23 World Wrestling Championships 2024) போட்டிகள் அக்டோபர் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை அல்பேனியாவின் (Albania) டிரானாவில் நடைபெற்றன. SL A Vs AFG A: எமர்ஜிங் ஆசிய கோப்பை 2024; இலங்கையை வீழ்த்தி கோப்பை வென்று ஆப்கானிஸ்தான் சாதனை..!

இதில், இந்திய வீரர் சிராக் சிக்காரா (Chirag Chikkara) தங்கம் வென்று அசத்தியுள்ளார். முதல் சுற்றில், ஜப்பானின் காடுகோ ஓசாவாவை 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி, அவர் தனது காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் இந்தியா பதிரோவை 12-2 என்ற கணக்கில் வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தினார். பின்னர் அரையிறுதியில், கஜகஸ்தானின் ஆலன் ஓரல்பெக்கிற்கு எதிராக சிராக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிப்போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தார். இதனையடுத்து, இறுதிப்போட்டியில் கராச்சோவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற அமன் செஹ்ராவத் (ஆண்கள் 57 கிலோ) மற்றும் கடந்த ஆண்டு ரீத்திகா ஹூடா (பெண்கள் 76 கிலோ) ஆகியோருக்குப் பிறகு சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தைப் பிடித்த மூன்றாவது இந்தியர் ஆவார். மேலும், 57 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.