BAN Vs RSA 2nd Test: 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை.. தென்னாப்பிரிக்கா நிலையான ஆட்டம்.., வங்கதேசம் சொதப்பல்..!
வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்களை இழந்து 413 ரன்கள் அடித்துள்ளது.
அக்டோபர் 30, சட்டோகிராம் (Sports News): வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் (BAN Vs RSA 2nd Test, Day 2) போட்டி சட்டோகிராமில் நேற்று (அக்டோபர் 29) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. BAN Vs RSA 2nd Test: முதல் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 307 ரன்கள் குவிப்பு.. டி சோர்சி, ஸ்டப்ஸ் அபார சதம்..!
அதன்படி, தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 81 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 307 ரன்கள் குவித்தது. வங்கதேச சார்பில் தைஜூல் இஸ்லாம் (Taijul Islam) 2 விக்கெட்களை கைப்பற்றினார். தென்னாப்பிரிக்கா அணியில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs) 106 ரன்களில் அவுட் ஆனார். டோனி டி சோர்சி (Tony de Zorzi) நிதானமாக விளையாடி 141 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில், டேவிட் பெடிங்காம் (David Bedingham) அரைசதம் கடந்து 59 ரன்னில் அவுட் ஆனார்.
மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த சோர்சி 177 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கைல் வெர்ரைன் டக் அவுட்டானார். இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்களை இழந்து 413 ரன்கள் குவித்துள்ளது. வியான் முல்டர் 12 ரன்னிலும், ரியான் ரிக்கல்டன் 11 ரன்னிலும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணியில் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
(The above story first appeared on LatestLY on Oct 30, 2024 12:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

