BAN Vs RSA 2nd Test Day 1 (Photo Credit: @SportszValley X)

அக்டோபர் 29, சட்டோகிராம் (Sports News): வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் (BAN Vs RSA 2nd Test, Day 1) போட்டி சட்டோகிராமில் இன்று (அக்டோபர் 29) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. BAN Vs RSA 2nd Test: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி.. மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்..!

அதன்படி முதலில் களமிறங்கிய கேப்டன் ஏய்டன் மார்க்கரம் (Aiden Markram), டோனி டி சோர்சி (Tony de Zorzi) நிதானமாக விளையாடி முதல் 69 ரன்கள் சேர்த்த நிலையில், மார்க்கரம் 33 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்டப்ஸ் (Tristan Stubbs), டி சோர்சி உடன் சேர்ந்து நிதானமாக விளையாடி 2-வது விக்கெட்டிற்கு 201 ரன்கள் குவித்தனர். இருவரும் சதமடித்த நிலையில், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 106 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த டேவிட் சற்று அதிரடியாக விளையாடினார்.

மறுபுறம் சோர்சி 141 ரன்களுடன் களத்தில் இருந்தார். முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக 81 ஓவர்களுடன் சற்று முன்னதாகவே முடிவு பெற்றது. தென்னாப்பிரிக்கா அணி 81 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 307 ரன்கள் குவித்துள்ளது. வங்கதேச சார்பில் தைஜூல் இஸ்லாம் (Taijul Islam) 2 விக்கெட்களை கைப்பற்றினார். நாளை காலை 9.30 மணியளவில் 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்கும்.

டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்: