ZIM Vs SA, Toss: தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. முத்தரப்பு டி20 தொடர் ஆரம்பம்..!

ஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடரின் முதலாவது போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ZIM Vs SA, Toss (Photo Credit: @ZimCricketv X)

ஜூலை 14, ஹராரே (Sports News): ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 அணிகள் மோதும் முத்தரப்புத் தொடர், ஜிம்பாப்வேயில் ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 26 வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். லீக் சுற்றுப் போட்டிகளில் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிபோட்டிக்கு செல்லும். ENG Vs IND 3rd Test, Day 5: ரிஷப் பந்த், கேஎல் ராகுல் அவுட்.. இந்தியா தடுமாற்றம்..!

ஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா (Zimbabwe Vs South Africa):

டி20 வடிவிலான இந்த முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில், இன்று (ஜூலை 14) ஜிம்பாப்வே - தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி முடிவில்லை. இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ஜிம்பாப்வே (பிளேயிங் லெவன்):

பிரையன் பென்னட், வெஸ்லி மாதேவெரே, கிளைவ் மடண்டே, சிக்கந்தர் ராசா (கேப்டன்), ரியான் பர்ல், தஷிங்கா முசெகிவா, டோனி முனியோங்கா, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் நகரவா, பிளஸ்ஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு.

தென்னாப்பிரிக்கா (பிளேயிங் லெவன்):

ரீசா ஹென்ட்ரிக்ஸ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென் (கேப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், ரூபின் ஹெர்மன், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், அண்டில் சிமெலேன், நகாபயோம்சி பீட்டர், நந்த்ரே பர்கர், லுங்கி என்கிடி.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement