Cricket Updates: மும்பை அணியில் மதுஷங்கா விலகல் - தென் ஆப்பிரிக்காவின் 17 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் சேர்ப்பு..!
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நாயகன் விருதை வென்றவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைக்கப்பட்டார்.
மார்ச் 21, மும்பை (Cricket News): ஐபிஎல் 2024 (IPL 2024) சீசன் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இலங்கையை சேர்ந்த மதுஷங்கா இடம்பெற்றிருந்தார். தற்போது காயம் காரணமாக இந்த சீசன் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 17 வயதுள்ள மபாவா என்ற இளம் வீரரை மும்பை அணி சேர்த்துக்கொண்டது. இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். World Forest Day 2024: ஆதவனே அடைய முடியாத பெரும் பரப்பு நம் காடு.. உலக வன தினம்..!
மபாவா 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக பந்து வீசினார். மேலும், அந்த தொடரில் 21 விக்கெட்களை எடுத்து தொடர் நாயகன் விருதையும் பெற்றார். இவர், தென் ஆப்பிரிக்கா ஏ, தென் ஆப்பிரிக்கா எமெர்ஜிங் அணிகளுக்காக விளையாடியுள்ளார். சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்ட இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், யார்க்கர் மற்றும் பவுன்சர் பந்துகள் வீசுவதிலும் வல்லமை படைத்தவராவார்.
(The above story first appeared on LatestLY on Mar 21, 2024 12:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

