Forest (Photo Credit: Pixabay)

மார்ச் 21, புதுடெல்லி (New Delhi): உலக வன நாளில், நமது கிரகம் உயிர்த்திருப்பதற்கு காடுகளின் பங்கு என்ன என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக கொண்டாடப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தம் செய்வது, எண்ணற்ற உயிரினங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்வது என புவியின் நுரையீரலாக காடுகள் உள்ளது.

நீங்கள் எழுத பயன்படுத்தும் நோட்டு புத்தகம், கட்டும் வீடு அல்லது உங்கள் அன்றாட மருந்துகள் என காடுகள் இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளன. ஆனால், நாம் எப்போதும் இவற்றுடன் தொடர்புபடுத்திக்கொள்வதில்லை. எனவே தான் மார்ச் 21 இன்றைய நாள், சர்வதேச வன தினமாகக் (World Forest Day) கொண்டாடப்பட்டு, நம் வாழ்வில் வனங்களின் கொடுக்கும் கொடைகள் என்ன என்பது நினைவுகூறப்படுகிறது. NEET PG 2024 Exam Preponed: தேர்தல் எதிரொலி... நீட் தேர்வு தேதியில் மாற்றம்.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!

மரங்களும் காடுகளும் இல்லாமல் நாம் வாழ முடியாது. ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் மரங்களை வெட்டி வருகிறோம். இது பூமியை பாதிக்கிறது, புவி வெப்பமடைதல் மற்றும் குறைவான வளங்களுக்கு வழிவகுக்கிறது. நம்மிடம் இந்த கிரகம் மட்டுமே உள்ளது என்பதை நாம் உணர வேண்டும், எனவே நாம் அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.