SL Vs BAN 1st T20I, Toss: இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றி பெற போவது யார்..?
இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டியில், இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
ஜூலை 10, பல்லேகலே (Sports News): வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரையும், 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது. இந்நிலையில், இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டி இன்று (ஜூலை 10) பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது. SL Vs BAN 1st T20I: இலங்கை - வங்கதேசம் டி20 தொடர்.. நாளை முதல் தொடக்கம்..!
இலங்கை எதிர் வங்கதேசம் (Sri Lanka Vs Bangladesh):
சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி, லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 17 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இலங்கை அணி 11 போட்டிகளிலும், வங்கதேச அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இலங்கை (பிளேயிங் லெவன்):
பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க (கேப்டன்), தசுன் ஷனக, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார.
வங்கதேசம் (பிளேயிங் லெவன்):
தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், லிட்டன் தாஸ் (கேப்டன்), முகமது நைம், தௌஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், தன்சிம் ஹசன் சாகிப், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முகமது சைபுதீன்.