ஜூலை 09, பல்லேகலே (Sports News): வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரையும், 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது. இதனையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை (ஜூலை 10) ஆரம்பமாகிறது. முதலாவது டி20 போட்டி, பல்லேகலே மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ENG Vs IND 3rd Test: இங்கிலாந்து - இந்தியா 3வது டெஸ்ட்.. நாளை லண்டனில் மோதல்..!
இலங்கை எதிர் வங்கதேசம் (Sri Lanka Vs Bangladesh):
சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி, லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இலங்கை அணியில் ஆல் ரவுண்டர் தசுன் சனகா, சமிக கருணாரத்ன மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். ஏற்கனவே அணியில் இடம்பிடித்த வனிந்து ஹசரங்க காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 17 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இலங்கை அணி 11 போட்டிகளிலும், வங்கதேச அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இலங்கை அணி வீரர்கள்:
சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷனக, துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, சமிக கருணாரத்ன, பி நுரஷ கருணாரத்ன, எஷான் மலிங்கா.
வங்கதேச அணி வீரர்கள்:
லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், எம் நயிம், தௌஹித் ஹிரிடோய், எம் சய்புதீன், ஜேக்கர் அலி, ஷமிம் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், ஆர் ஹொசைன், எம் ஹசன், என் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், எஸ் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.