RCB Vs SRH 2nd Batting Powerplay (Photo Credit: @IPL X)

மே 23, லக்னோ (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரில், இன்று (மே 23) 65வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (RCB Vs SRH, Match 65) அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் தொடர் மழை காரணமாக, லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. ஏற்கனவே, குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. RCB Vs SRH: இஷான் கிஷன் அதிரடி ஆட்டம்.. ஆர்சிபி வெற்றி பெற 232 ரன்கள் இமாலய இலக்கு..!

சன்ரைசர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் (Sunrisers vs Royal Challengers):

இந்நிலையில், இன்றைய போட்டியில் ஜித்தேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு‍ அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா 34, ட்ராவிஸ் ஹெட் 17 ரன்னில் அதிரடியான தொடக்கம் கொடுத்து அவுட்டாகினர். அடுத்து வந்த கிளாசன் 24 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 94 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 231 ரன்கள் குவித்தது.

இமாலய இலக்கு:

ஆர்சிபி அணி வெற்றி பெற 232 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தியது. அதன்படி, விராட் கோலி - பில் சால்ட் ஜோடி அதிரடியான தொடக்கம் கொடுத்தது. பவர் பிளேயின் 6 ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் 72 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 42 ரன்கள், சால்ட் 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.