SA Vs NZ, Toss: தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றி பயணம் தொடருமா..?

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

SA Vs NZ, Toss: தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றி பயணம் தொடருமா..?
SA Vs NZ, Toss (Photo Credit: @ESPNcricinfo X)

ஜூலை 16, ஹராரே (Sports News): தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முத்தரப்புத் தொடரில் விளையாடி வருகிறது. இந்த முத்தரப்பு டி20 தொடர் ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 26 வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிபோட்டிக்கு செல்லும். அனைத்து போட்டிகளும், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும். SA Vs NZ: முத்தரப்பு டி20 தொடர்.. தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்..!

தென்னாப்பிரிக்கா எதிர் நியூசிலாந்து (South Africa Vs New Zealand):

முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில், ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று (ஜூலை 16) நடைபெறும் 2வது லீக் போட்டியில், தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 15 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், தென்னாப்பிரிக்க அணி 11 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ரஸ்ஸி வான் டெர் டசென் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா (பிளேயிங் லெவன்):

ரீசா ஹென்ட்ரிக்ஸ், லுவாண்ட்ரே பிரிட்டோரியஸ், ராஸ்ஸி வான் டெர் டசன் (கேப்டன்), ரூபின் ஹெர்மன், டெவால்ட் ப்ரீவிஸ், ஜார்ஜ் லிண்டே, செனுரன் முத்துசாமி, கார்பின் போஷ், ஜெரால்ட் கோட்ஸி, குவேனா மபாகா, லுங்கி என்கிடி.

நியூசிலாந்து (பிளேயிங் லெவன்):

டிம் சீஃபர்ட், டெவோன் கான்வே, டிம் ராபின்சன், டேரில் மிட்செல், மிட்செல் ஹே, பெவோன் ஜேக்கப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மாட் ஹென்றி, இஷ் சோதி, ஜேக்கப் டஃபி.

(The above story first appeared on LatestLY on Jul 16, 2025 04:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).