South Africa Vs New Zealand (Photo Credit: @BLACKCAPS X)

ஜூலை 15, ஹராரே (Sports News): தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முத்தரப்புத் தொடரில் விளையாடி வருகிறது. இந்த முத்தரப்பு டி20 தொடர் ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 26 வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். லீக் சுற்றுப் போட்டிகளில் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிபோட்டிக்கு செல்லும். அனைத்து போட்டிகளும், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும். ZIM Vs SA: டெவால்ட் ப்ரீவிஸ், ரூபின் ஹெர்மன் அதிரடி ஆட்டம்.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா எதிர் நியூசிலாந்து (South Africa Vs New Zealand):

முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில், ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், நாளை (ஜூலை 16) நடைபெறும் 2வது லீக் போட்டியில், தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 15 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், தென்னாப்பிரிக்க அணி 11 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:

ரஸ்ஸி வான் டெர் டசென் (கேப்டன்), லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெவால்ட் பிரெவிஸ், ஜார்ஜ் லிண்டே, செனுரான் முத்துசாமி, கார்பின் போஷ், ஜெரால்ட் கோட்ஸி, நந்த்ரே பர்கர், நகாபயோம்ஸி பீட்டர், லுங்கி நிகிடி, ஆண்டிலே சிமெலேன், ரூபின் ஹெர்மன், க்வேனா மபாகா. ENG Vs IND 3rd Test, Day 5: தனி ஆளாக போராடிய ஜடேஜா.. இங்கிலாந்து த்ரில் வெற்றி..!

நியூசிலாந்து அணி வீரர்கள்:

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, பெவன் ஜேக்கப்ஸ், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, டிம் சீஃபர்ட், இஷ் சோதி, டெவன் கான்வே, டிம் ராபின்சன், ஜேம்ஸ் நீஷாம், மிட்ச் ஹே,