ஏப்ரல் 24 (Cricket News): டாடா ஐ.பி.எல் 2023 (TATA IPL 2023) போட்டியின் 34வது ஆட்டம் இன்று ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் - சன் ரைஸஸ் ஹைதராபாத் அணியும் (DelhI Capitals Vs Sun Rises Hyderabad) மோதின.
முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சன் ரைஸஸ் அணியினரின் பந்துவீச்சு இன்று சாதகமாக அமைந்ததால் டெல்லி அணி ரன்களை குவிக்க இயலாமல் திணறியது.
அந்த அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் பல வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். டேவிட் வார்னர் 20 பந்துகளில் 23 ரன்னும், மிட்செல் 15 பந்துகளில் 25 ரன்னும், மனிஷ் 27 பந்துகளில் 34 ரன்னும், அக்சர் 34 பந்துகளில் 34 ரன்னும் மட்டுமே எடுத்திருந்தனர். Bharathi Kannamma 2: அம்மா மேலே சத்தியம்.. இனிமே அதை செய்யவே மாட்டேன் – பாரதி எடுத்த முக்கிய முடிவு.. அதிரடி ப்ரமோ வீடியோ வைரல்..!
ஆட்டத்தின் இறுதியில் 144 ரன்கள் குவித்த டெல்லி அணி, சன் ரைஸஸ் ஹைதராபாத் அணியினருக்கு 145 ரன்களை இலாக்காக வைத்துள்ளது. ஆட்டத்தின் முடிவில் யார் வெற்றி அடைந்தார்கள் என்ற விபரம் தெரியவரும் என்பதால், போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.