Vijay Television Serial | Barathi Kannamma Episode 2 (Photo Credit: Facebook)

ஏப்ரல் 24 (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) கடந்த 2 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி, மக்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்ற நெடுந்தொடர் பாரதி கண்ணம்மா (Barathi Kannamma). இந்த நெடுந்தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோஷியல் மீடியாவில் தெரிவிக்கப்பட்ட தொடர் கருத்துக்களை தொடர்ந்து நிறைவு பெற்றது.

இந்த முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, பாரதி கண்ணம்மா தொடரின் 2ம் பாகம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் வினுஷா தேவி, சிபு சூரியன், பரினா ஆசாத், ரூபா ஸ்ரீ, தீபா ஷங்கர், ராதா உட்பட பலரும் நடித்து வருகின்றனர். Urfi Javed: துப்பாக்கி வைக்கும் இடமா அது?.. உர்பியின் அடுத்த அல்டிமேட் லெவல் கிளிக்ஸ்.. திகைக்கும் ரசிகர்கள்.!

முதல் பாகத்தில் திருமணம் முடிந்து பிரிக்கப்பட்ட கண்ணம்மா - பாரதி ஆகியோரை எப்போது சேர்ப்பார்கள்? எப்படி சேர்ப்பார்கள்? இப்போதாவது சேர்த்துவிடுவார்களா? என்ற பல வகைகளில் தொடர் கேள்விகள் இருந்து வந்தன. இந்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் பாரதி - கண்ணம்மா காதல் காட்சிகள், வெண்பாவின் வில்லத்தனம் என பரபரப்பாக நாடகம் நகருகிறது.

தற்போது மது மற்றும் புகைப்பழக்கம் கொண்ட பாரதியை கண்ணம்மா சிறுகச்சிறுக மாற்றி வந்த நிலையில், சூழ்நிலையால் மகனிடம் அம்மா பேசாமல் இருக்கிறார். இதனால் தாயை தன்னுடன் பேச வைக்க மீண்டும் பாரதி குடிப்பதாக எச்சரிக்க, தாய் மீண்டும் தன்னுடன் வந்ததும் பாரதி மதுபான புட்டிகளை உடைக்கிறார். இந்த ப்ரமோ வீடியோ வைரலாகியுள்ளது.