CSK Vs RR IPL 2025 (Photo Credit: @IPL X)

மார்ச் 30, கௌகாத்தி (Sports News): டாடா ஐபிஎல் 2025 போட்டியில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (Chennai Super கிங்ஸ் Vs Rajasthan Royals IPL 2025) அணிகள், கௌகாத்தி கிரிக்கெட் மைதானத்தில் மோதிய ஆட்டம் நடைபெற்றது. இரவு 07:30 மணியளவில் ஆட்டம் தொடங்கி நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, ராஜஸ்தான் அணி (CSK Vs RR IPL 2025) பேட்டிங் செய்தது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இதனால் 183 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி களமிறங்கியது. CSK Vs RR: முந்தைய தோல்வியில் இருந்து மீளுமா சென்னை சிங்கங்கள்? டாஸ் வென்று சென்னை பௌலிங்.. ராஜஸ்தான் பேட்டிங்.! 

ராயல்ஸ் எதிர் சூப்பர் கிங்ஸ்:

ராஜஸ்தான் அணியின் சார்பில் களமிறங்கியவர்களில் நிதிஷ் ராணா 36 பந்துகளில் 81 ரன்கள் அடித்து அசத்தினார். ரியான் பராக் 28 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார். சென்னை அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் கலீல், மாதேஷா, நூர் அகமத் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அதனைத்தொடர்ந்து சென்னை அணியின் சார்பில் களமிறங்கியவர்கள் முதல் 6 ஓவர்களில் ரன்களை குவிக்காமல் தடுமாறிப்போயினர். ரவீந்திரா முதலிலேயே வெளியேறினார். சென்னை அணியின் சார்பில் விளையாடிய ருத்ராஜ் 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். தோனி 11 பந்துகளில் 16 ரன்கள் அடித்தார். ஜடேஜா 22 பந்துகளில் 32 ரன்கள் அடித்துள்ளார். ஜேமி ஓவர்டன் 4 பந்துகளில் 11 ரன்கள் அடித்தார். இறுதியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை, சென்னையை தோற்கடித்து உறுதி செய்துள்ளனர்.

ராணா அசத்தல்:

பதிரானா அசத்தல்:

பராக் அசத்தல்: