மார்ச் 30, கௌகாத்தி (Sports News): டாடா ஐபிஎல் 2025 போட்டியில், கௌகாத்தி கிரிக்கெட் மைதானத்தில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே போட்டி நடைபெறுகிறது. இன்று இரவு 07:30 மணியளவில் ஆட்டம் நடைபெறுகிறது. இப்போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி (Star Sports) & ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) ஆகியவற்றில் நேரலையில் காணலாம். GT Vs MI Toss Update: ஐபிஎல் 2025: குஜராத் Vs மும்பை; டாஸ் வென்று எம்ஐ பௌலிங்.!
ராயல்ஸ் எதிர் சூப்பர் கிங்ஸ் (Royals Vs Super Kings IPL 2025):
இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட், பௌலிங் தேர்வு செய்தார். இதனால் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த சென்னை இன்று வெற்றிபெறுமா? தொடர் தோல்வியை எதிர்கொண்ட ராஜஸ்தான் சென்னையை வீழ்த்தி வெற்றி அடையுமா? என ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK Squad IPL 2025 Today) அணியில் இன்று ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட், விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா ஆகியோர் விளையாடுகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR Squad IPL 2025 Today) அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா ஆகியோர் விளையாடுகின்றனர்.
டாஸ் வென்று சென்னை அணி பந்துவீச்சு தேர்வு:
🚨 Toss 🚨@ChennaiIPL won the toss and elected to bowl against @rajasthanroyals
Updates ▶️ https://t.co/V2QijpWpGO#TATAIPL | #RRvCSK pic.twitter.com/HFXVecPbCg
— IndianPremierLeague (@IPL) March 30, 2025
சென்னை அணியின் சார்பில் இன்று விளையாடும் வீரர்கள்:
LIONED UP FOR THE ROYAL CLASH! 🦁🔥#RRvCSK #WhistlePodu 🦁💛 pic.twitter.com/NKGyzFgaR1
— Chennai Super Kings (@ChennaiIPL) March 30, 2025