SRH Vs RR Highlights: போராடி தோல்வி அடைந்த ராஜஸ்தான்.. ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. இஷான் அசத்தல்.!

ஐபிஎல் 2025 போட்டியில், சொந்த மண்ணில் முதல் வெற்றியை ஹைதராபாத் அணி உறுதி செய்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா சொந்த மண்ணில் பெங்களூரிடம் தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் சொந்த மண்ணின் அணிக்கு இமாலய வெற்றி கிடைத்தது.

SRH Vs RR Highlights: போராடி தோல்வி அடைந்த ராஜஸ்தான்.. ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. இஷான் அசத்தல்.!
Match 2: SRH Vs RR | IPL 2025 (Photo Credit: @IPL X)

மார்ச் 23, ஹைதராபாத் (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (TATA Indian Premier League 2025) போட்டியில், 23 மார்ச் 2025 ஞாயிற்றுக்கிழமை இன்று, நண்பகல் 03:30 மணியளவில், ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் (SunRisers Hyderabad Vs Rajasthan Royals) அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் பலரும் பார்த்து ரசித்தனர். கிரிக்கெட் மைதானத்திலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். SRH Vs RR: இமாலய இலக்கு.. 47 பந்துகளில் 106 ரன்கள் அடித்து விளாசிய இஷான் கிஷான்; ராஜஸ்தானுக்கு 106 ரன்கள் இலக்கு.! 

ராஜஸ்தான் அணிக்கு 276 ரன்கள் இலக்கு:

போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணியின் சார்பில் விளையாடியவர்களில் அபிஷேக் சர்மா 11 பந்துகளில் 24 ரன்கள், டார்விஸ் ஹெட் 31 பந்துகளில் 67 ரன்கள், நிதிஷ் குமார் ரெட்டி 15 பந்துகளில் 30 ரன்கள், ஹென்ரிச் காளீசன் 14 பந்துகளில் 34 ரன்கள் அடித்து நொறுக்கி இருந்தனர். இஷான் கிஷான் 47 பந்துகளில் 106 ரன்கள் அடித்து, சதம் கடந்து அசத்தி இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. கடந்த சீசனில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 288 ரன்கள் எடுத்த நிலையில், 2 ரன்கள் வித்தியாசத்தில் பழைய சாதனையை சமன் செய்ய ஹைதராபாத் தவறவிட்டது. ராஜஸ்தான் அணியின் சார்பில் பந்துவீசியவரலில் மகேஷ் 2 விக்கெட்டுகள், துஷ்கர் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி இருந்தனர்.

போராடி தோற்ற ராஜஸ்தான்:

ராஜஸ்தான் அணியின் சார்பில் விளையாடியவர்களில் சஞ்சு 37 பந்துகளில் 66 ரன்கள், நிதிஷ் ராணா 8 பந்துகளில் 11 ரன்கள், துருவ 35 பந்துகளில் 70 ரன்கள், ஷிமரோன் 23 பந்துகளில் 42 ரன்கள் அடித்தனர். எனினும், இறுதியில் 20 ஓவர்களில் இலக்கை எட்ட இயலாத ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியின் சார்பில் விளையாடியவர்களில் சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் படேல் தலா விக்கெட் எடுத்தனர்.

சன்ரைசர்ஸ் அணி அசத்தல் வெற்றி:

நின்று ஆடிய சிவம் துபே:

(The above story first appeared on LatestLY on Mar 23, 2025 08:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).