SRH Vs RR | IPL 2025 (Photo Credit: @IPL X)

மார்ச் 23, ஹைதராபாத் (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (TATA Indian Premier League 2025) போட்டியில், 23 மார்ச் 2025 ஞாயிற்றுக்கிழமை இன்று, நண்பகல் 03:30 மணியளவில், நடப்பு சீஸனின் இரண்டாவது ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் (SunRisers Hyderabad Vs Rajasthan Royals) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். CSK Vs MI: 18 ஆண்டுகளாக ஒரே ராஜ்ஜியம்.. இன்று சென்னை - மும்பை அணிகள் நேரடி மோதல்.. கொண்டாட்டத்தில் திணறப்போகும் சேப்பாக்.! 

ஹைதராபாத் அணி பேட்டிங் செய்கிறது:

இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணியின் சார்பில் விளையாடியவர்களில் அபிஷேக் சர்மா 11 பந்துகளில் 24 ரன்கள், டார்விஸ் ஹெட் 31 பந்துகளில் 67 ரன்கள், நிதிஷ் குமார் ரெட்டி 15 பந்துகளில் 30 ரன்கள், ஹென்ரிச் காளீசன் 14 பந்துகளில் 34 ரன்கள் அடித்து நொறுக்கி இருந்தனர். இஷான் கிஷான் 47 பந்துகளில் 106 ரன்கள் அடித்து, சதம் கடந்து அசத்தி இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. கடந்த சீசனில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 288 ரன்கள் எடுத்த நிலையில், 2 ரன்கள் வித்தியாசத்தில் பழைய சாதனையை சமன் செய்ய ஹைதராபாத் தவறவிட்டது. ராஜஸ்தான் அணியின் சார்பில் பந்துவீசியவரலில் மகேஷ் 2 விக்கெட்டுகள், துஷ்கர் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் அடித்து அசத்தி இருந்தனர்.

இஷான் கிஷான் சதம் அடித்து விளாசல்: