PBKS Vs CSK: ஐபிஎல் 2025: இன்று பஞ்சாப் - சென்னை அணிகள் மோதல்.. மேட்ச் அப்டேட் இதோ.!
இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் முல்லன்பூர் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. கிரிக்கெட் அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள்.
ஏப்ரல் 08, கொல்கத்தா (Sports News Tamil): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டித் தொடரில், நேற்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றிபெற்றது. இதன் வாயிலாக பெங்களூர் அணி ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் (IPL 2025 Points Table) தன்னை மூன்றாவது இடத்தில் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது. ஏப்ரல் 08, 2025 இன்று நண்பகல் 03:30 மணியளவில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Kolkata Knight Riders Vs Lucknow Super Giants IPL 2025) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். KKR Vs LSG: ஐபிஎல் 2025: இன்று கொல்கத்தா - லக்னோ அணிகள் மோதல்.. மேட்ச் அப்டேட் இதோ.!
பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் (Punjab Kings Vs Chennai Super King IPL 2025):
அதனைத்தொடர்ந்து, இன்று இரவு 07:30 மணியளவில் முள்ளன்பூரில் உள்ள மஹாராஜா யாதேவேந்திரா சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Maharaja Yadavindra Singh International Cricket Stadium) பஞ்சாப் கிங்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் நடைபெறுகிறது. கிங்ஸ் எதிர் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியிலாவது சென்னை அணி வெற்றிபெறுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் நடப்பு சீசனில் சென்னை அணி முதல் போட்டிக்கு பின்னர் அடுத்தடுத்து தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. பஞ்சாப் 3 போட்டியில் 2 வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கிறது.
(The above story first appeared on LatestLY on Apr 08, 2025 08:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

