LSG Vs KKR IPL 2025 (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 08, கொல்கத்தா (Sports News Tamil): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டித் தொடரில், நேற்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றிபெற்றது. இதன் வாயிலாக பெங்களூர் அணி ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் (IPL 2025 Points Table) தன்னை மூன்றாவது இடத்தில் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது. அதனைத்தொடர்ந்து, ஏப்ரல் 08, 2025 இன்று நண்பகல் 03:30 மணியளவில் 21வது போட்டி நடக்கிறது. Rajat Patidar: ஹர்திக் பந்தில் முகத்தில் அடி வாங்கிய ரஜத் படிதார்.. வெடவெடத்துப்போன ரசிகர்கள் கூட்டம்.! 

நைட் ரைடர்ஸ் எதிர் சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Knight Riders Vs Super Giants):

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Kolkata Knight Riders Vs Lucknow Super Giants IPL 2025) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். தலா 4 போட்டிகளில் மோதி இரண்டில் வெற்றிகண்டுள்ள இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் 5 மற்றும் 6 வது இடத்தில் இருக்கின்றன.

தள்ளிவைக்கப்பட்ட ஆட்டம் இன்று நடக்கிறது:

முன்னதாக இன்றைய ஆட்டம் கடந்த ஏப்ரல் 06, 2025 அன்று நடப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அன்றைய நாளில் ராமநவமி 2025 பண்டிகையும் சிறப்பிக்கப்பட்டது. இதனால் கொல்கத்தாவில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தல், விழாக்கால பாதுகாப்பு பணிகளை கருத்தில் கொண்டு ஐபிஎல் நிர்வாகத்திடம் இப்போட்டியை மட்டும் தேதி தள்ளிவைக்க கொல்கத்தா காவல்துறை கோரிக்கை வைத்திருந்தது. இதனை ஏற்று போட்டியின் தேதியும் தள்ளிவைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.