CSK Vs PBKS: ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? இன்று சேப்பாக்கில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதல்.!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியின் 49 வது ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. போட்டி குறித்த அப்டேட்களுக்கு லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்துடன் இணைந்திருக்கவும்.

CSK Vs PBKS: ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? இன்று சேப்பாக்கில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதல்.!
CSK Vs PBKS (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 30, சென்னை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று (ஏப்ரல் 30) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி பெற்றது. பேட்டிங்கின்போது சீரான இடைவெளியில் கொல்கத்தா அணி விக்கெட் இழந்து தடுமாறினாலும், அணியின் வீரர்கள் ஸ்கோர் குவிப்பில் ஈடுபட்டு அதிரடி காட்டினர். DC Vs KKR: பந்துவீச்சில் பஞ்சராக்கிய டெல்லி அணிக்கு இமாலய இலக்கு.. அசத்தல் பேட்டிங்கில் கொல்கத்தா..! 

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் (Chennai Super Kings Vs Punjab Kings)

அதனைத்தொடர்ந்து, இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே மோதல் நடைபெறுகிறது. நடப்பு தொடரில் இருந்து சென்னை அணி தோல்விகளால் வெளியேறி இருந்தாலும், எஞ்சியுள்ள ஆட்டத்திலாவது வெற்றி பெற்று ரசிகர்களுக்கு ஆறுதலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் தொடர் தோல்வி ரசிகர்களிடையேயும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது சென்னை தொடர் தோல்வியை பரிசுப்போல ஏந்தி ரசிகர்களின் விரக்தியை அதிகரிக்குமா? என்பது இன்று தெரிந்துவிடும்.

(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 08:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).