DC Vs KKR: பந்துவீச்சில் பஞ்சராக்கிய டெல்லி அணிக்கு இமாலய இலக்கு.. அசத்தல் பேட்டிங்கில் கொல்கத்தா..!
இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில், இன்று நைட் ரைடர்ஸ் Vs கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது.
ஏப்ரல் 29, டெல்லி (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே மோதும் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பௌலிங் தேர்வு செய்தது. இதனால் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிகாரத்திமிர்? ஏ.எஸ்.பி-க்கு பளார் விட முற்பட்ட முதல்வர்.. அதிர்ச்சி வீடியோ லீக்..!
டெல்லி அணிக்கு இமாலய இலக்கு:
முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் விளையாடிய ரஹ்மானுல்லா 12 பந்துகளில் 26 ரன்கள், சுனில் நரேன் 16 பந்துகளில் 27 ரன்கள், ஆங்கிரிஷ் 32 பந்துகளில் 44 ரன்கள், ரிங்கு சிங் 25 பந்துகளில் 36 ரன்கள், ரூசெல் 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து அசத்தினர். பந்துவீச்சை பொறுத்தமட்டில் டெல்லி இன்று ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சித்தனை படைத்துள்ளது. 20 வது ஓவரில் 3, 4, 5 வது panthil அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது. டெல்லி அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள், துஷ்மந்தா 1 விக்கெட், விப்ராஜ் மற்றும் அக்சர் தலா 2 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
அக்சர் படேலின் அசத்தல் பந்துவீச்சு:
Into the act straight away 😎
Captain Axar Patel is leading #DC's roar 🔥
Updates ▶ https://t.co/saNudbWaXT #TATAIPL | #DCvKKR | @akshar2026 pic.twitter.com/sH0Ln5dKQd
— IndianPremierLeague (@IPL) April 29, 2025
டெல்லி அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு:
🚨 Toss 🚨 @DelhiCapitals won the toss and elected to bowl against @KKRiders
Updates ▶ https://t.co/saNudbWINr #TATAIPL | #DCvKKR pic.twitter.com/VDNUH29eTK
— IndianPremierLeague (@IPL) April 29, 2025
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 09:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

