Yogi Babu: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின் வர்ணனையாளராக யோகிபாபு; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.!

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், நடிகர் யோகிபாபு சில நிமிடங்கள் வர்ணனையாளர்கள் பிரிவில் கலந்துகொண்டார். கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.

Yogi Babu: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின் வர்ணனையாளராக யோகிபாபு; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.!
Match 3: CSK Vs MI 2025| Actor Yogi Babu with Chika IPL 2025 (Photo Credit: @StarSportsTamil X)

மார்ச் 23, சேப்பாக்கம் (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (TATA Indian Premier League 2025) போட்டியில், 23 மார்ச் 2025 ஞாயிற்றுக்கிழமை இன்று, இரவு 07:30 மணியளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (Chennai Super Kings Vs Mumbai Indians) அணிகள் மோதும், ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டி (CSK Vs MI 2025), சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்தில் காணலாம். Rohit Sharma Wicket: 18 வது முறை.. முதல் ஓவரிலேயே முடிந்தது ஜோலி.. வெறும் கையுடன் திரும்பிய ரோஹித்.. 4 பந்துகளில் 0 ரன்..! 

வர்ணனையாளர்களுடன் யோகிபாபு:

போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு பிரிவில், வர்ணனையாளர்களுடன் நடிகர் யோகிபாபு சில நிமிடங்கள் உரையாடி இருந்தார். அப்போது, முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சீக்கா, யோகிபாபுவை கலாய்த்தபடி போட்டியின் சுவாரஸ்யங்களை தொகுத்து வழங்கினார்.

வர்ணனையாளர்களுடன் நடிகர் யோகிபாபு:

(The above story first appeared on LatestLY on Mar 23, 2025 08:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).