IPL 2025: CSK Vs MI | Rohit Sharma Wicket (Photo Credit: @Cricketracker / @CricCrazyJohns X)

மார்ச் 23, சேப்பாக்கம் (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (TATA Indian Premier League 2025) போட்டியில், 23 மார்ச் 2025 ஞாயிற்றுக்கிழமை இன்று, இரவு 07:30 மணியளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (Chennai Super Kings Vs Mumbai Indians) அணிகள் மோதும், ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டி (CSK Vs MI 2025), சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்தில் காணலாம். போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. CSK Vs MI Toss Update: மஞ்சள் வீரர்களே ரெடியா? சென்னை - மும்பை அணிகள் ஆட்டம்.. டாஸ் வென்று சென்னை பந்துவீச்சு.! 

ரோஹித் சர்மா விக்கெட்:

இந்நிலையில், மும்பை அணியின் சார்பில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரோஹித் சர்மா, 4 பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். முதல் ஓவரின் 4 வது பந்தில், ரோஹித் சர்மா கலீல் அகமதுவின் பந்துவீச்சில், சிவம் டியூப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இந்த வெளியேற்றம், ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் 18 வது முறை ரன்கள் ஏதும் அடிக்காமல் வெளியேரியது ஆகும். ஏற்கனவே இதுவரை ஒரு போட்டியில் கூட கோப்பை வாங்காத பெங்களூர் அணியை விராட் கோலியின் நம்பர் 18, டாடா ஐபிஎல் சீசன் 18 என தொடர்புப்படுத்தி பேசி வருகின்றனர். ரோஹித் சர்மாவும் 18 வது முறையாக ரன்கள் ஏதும் எடுக்காமல், ஐபிஎல் 2025 போட்டியில், அணியின் முதல் ஆட்டத்தில் வெளியேறி இருக்கிறார். @Cricketracker @CricCrazyJohns

ரோஹித் சர்மா விக்கெட் இழந்து வெளியேறினார்:

கலீல் அகமதுவின் சுழலில் சிக்கிய ரோஹித், ரியான்: