MI Vs CSK: ஐபிஎல் 2025: இன்று மும்பை - சென்னை அணிகள் மோதல்.. மும்பையில் வெற்றிவாகை சூடுமா மஞ்சள் படை?
இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று நடைபெறுகிறது.
ஏப்ரல் 20, மும்பை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, இன்று நடைபெறும் 38 வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (Mumbai Indians Vs Chennai Super Kings) அணிகள் மோதுகின்றன. Vaibhav Suryavanshi: 20 பந்துகளில் 34 ரன்கள்.. மைதானத்தை மிரட்டிவிட்டு 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.!
இந்தியன்ஸ் எதிர் சூப்பர் கிங்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம்.
(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 08:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

