Vaibhav Suryavanshi (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 20, ஜெய்ப்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று (ஏப்ரல் 19) ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு (Lucknow Super Giants Vs Rajasthan Royals) இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் முடிவில் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. ராஜஸ்தான் எப்படியாவது மேட்சை டிரா செய்யும் என பலரும் எதிர்பார்த்தலும் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. MI Vs SRH Highlights: சொந்த மண்ணில் மும்பை திரில் வெற்றி.. ட்விஸ்ட் வைத்த ஹர்திக்.. அதிரடி ஆட்டம்.! 

3 சிக்ஸர், 2 பவுண்டரி அடித்து அசத்தல்:

ஆனால், போட்டியில் ஒரு சுவாரஷ்யம் நடந்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு (Vaibhav Suryavanshi IPL 2025) நேற்று வாய்ப்பு வழங்கப்பட்டது. 14 வயதுடைய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, நேற்று களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 பந்துகளில் 34 ரன்கள் விளாசியவர், களமிறங்கிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இளம் வீரர்களில் களமிறங்கியதும் சிக்ஸர் அடித்த 10 வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். தான் எதிர்கொண்ட 20 பந்தில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி விளாசினார். 8.4 வது ஓவரில் ஏய்டன் மார்க்கம் பௌலிங்கில் ரிஷப் பண்டிடம் கேட்ச் அவுட் கொடுத்து வெளியேறினார்.

வைபவ் சூர்யவன்ஷி ஏலத்தில் எடுக்கப்பட்டபோது:

சின்ன பையன் என நினைச்சீங்களா சார்?