GT Vs SRH: வெற்றியை தக்கவைத்து புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா குஜராத்? இன்று ஹைதராபாத் அணியுடன் மோதல்.!
இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கும் குஜராத் வெற்றியுடன் முன்னேறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மே 02, அகமதாபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி அடைத்தது. CSK Vs SRH IPL 2025: சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ்.. தொடர் தோல்வியில் இருந்து மீளப்போராடும் அணிகள்.. இன்று பலபரீட்சை.!
வெற்றியை தொடருமா குஜராத்?
அதனைத்தொடர்ந்து, இன்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து குஜராத் ஜெயிண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. இதுவரை 9 போட்டியில் விளையாடி 6 போட்டியில் வெற்றி பெற்றுள்ள குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து வெற்றியுடன் பயணித்தால் மட்டுமே குஜராத் காலிறுதிக்கு தேர்வு அடையும் என்பதால் குஜராத்தின் ஒவ்வொரு வெற்றியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.