MI Vs DC: வெற்றியுடன் தொடருமா மும்பையின் பயணம்? இன்று டெல்லி அணியுடன் மோதல்.!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில், இன்று இந்தியன்ஸ் எதிர் கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெறுகிறது. லேட்டஸ்ட் கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பின்தொடரவும்.

MI Vs DC: வெற்றியுடன் தொடருமா மும்பையின் பயணம்? இன்று டெல்லி அணியுடன் மோதல்.!
MI Vs DC IPL 2025 (Photo Credit : @IPL X)

மே 21, மும்பை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, இன்று நடப்பு சீஸனின் 63வது ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. CSK Vs RR: 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி.. சென்னை அணி மீண்டும் சொதப்பல்..!

வெற்றியை உறுதி செய்யுமா மும்பை?

இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேபிட்டல்ஸ் (Mumbai Indians Vs Delhi Capitals) அணிகள் மோதுகின்றன. இப்போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தை மும்பை தக்க வைக்குமா? அல்லது 5 வது இடத்தில் உள்ள டெல்லிக்கு வழிவிடுமா? என்பது இன்றைய போட்டியின் முடிவில் தெரியவரும்.

(The above story first appeared on LatestLY on May 21, 2025 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).