CSK Vs RR (Photo Credit: @IPL X)

மே 20, டெல்லி (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் தொடரில், இன்று (மே 20) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (Chennai Super Kings Vs Rajasthan Royals) அணிகள் மோதின. இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில், ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. CSK Vs RR: ராஜஸ்தான் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்கு.. ஆரம்பத்தில் அதிரடி காட்டிய சென்னை மீண்டும் சொதப்பல்..!

188 ரன்கள் இலக்கு:

அதன்படி, களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 187 ரன்கள் மட்டுமே அடித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக மாத்ரே 43, பிரேவிஸ் 42 ரன்கள் அடித்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆகாஷ் மத்வால், யுத்வீர் சிங் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதன்மூலம், ராஜஸ்தான் அணி வெற்றி பெற 188 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ராஜஸ்தான் அபார வெற்றி:

இதனையடுத்து, களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் 19 பந்தில் 36 ரன்கள் அடித்து அவுட்டானார். சூரியவன்சி 57 ரன்கள் அடித்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வைபவ் சூரியவன்சி அரைசதம் அடித்து அசத்தல்: