GT Vs CSK IPL 2025: இறுதியாக ஒரேயொரு வெற்றி வருமா? சென்னை அணி இன்று குஜராத்துடன் மோதல்.!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் குஜராத்தில் உள்ள மைதானத்தில் மோதுகின்றன.

GT Vs CSK IPL 2025: இறுதியாக ஒரேயொரு வெற்றி வருமா? சென்னை அணி இன்று குஜராத்துடன் மோதல்.!
GT Vs CSK IPL 2025 (Photo Credit : @IPL /@IPL2025Auction X)

மே 25, அகமதாபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (மே 24) நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் இறுதியில் டெல்லி அணி அசத்தல் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை - குஜராத் (CSK Vs GT IPL 2025) அணிகள் மோதிக்கொள்கின்றன. India's Tour to England: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் யார்? - பிசிசிஐ ஆலோசனை.! 

சூப்பர் கிங்ஸ் எதிர் ஜெயிண்ட்ஸ் (Chennai Super Kings Vs Gujarat Titans IPL 2025):

நடப்பு சாம்பியன்ஸ் குஜராத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது இறுதி ஆட்டத்தில் மோதுகிறது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரிய படுதோல்வி காரணமாக புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் இருக்கிறது. 13 போட்டியில் 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி, இறுதியாக இன்று நடக்கும் ஆட்டத்தில் வெற்றி அடைந்து ரசிகர்களுக்கு ஆறுதல் தருமா? அல்லது ஏமாற்றமே தருமா? என கேள்வி எழுந்துள்ளது.

(The above story first appeared on LatestLY on May 25, 2025 11:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).