மார்ச் 27, ஹைதரபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 கிரிக்கெட் (TATA IPL 2025 T20 Cricket) போட்டித்தொடரில், இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Sunrisers Hyderabad Vs Lucknow Super Giants) அணிகள் மோதிக்கொள்கின்றன. எல்எஸ்ஜி Vs எஸ்ஆர்எச் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் போர்ட்ஸ் தொலைக்காட்சி (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. SRH Vs LSG Toss Update: 300 ரன் இன்று சாத்தியமா? டாஸ் வென்று லக்னோ பௌலிங்.. ஹைதராபாத் பேட்டிங்.!
அபிஷேக், இஷான் விக்கெட் அடுத்தடுத்த 2 பந்துகளில் காலி:
இந்நிலையில், களத்தில் இருந்த அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து, கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். ஷர்துலின் பந்தில் நிகோலஸ் பூரான் கேட்ச் பிடிக்க விக்கெட் காலி ஆனது. அதனைத்தொடர்ந்து, இஷான் கிஷான் களமிறங்கிய நிலையில், அவரின் விக்கெட் ரிஷப் பண்டிடம் கேட்ச் அவுட் கொடுத்து வெளியேறினார். சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் இரண்டு வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இஷான் கிஷன் டக்-அவுட் முறையில் வெளியேறினார்.
பந்துவீச்சில் அசத்திய ஷரத்துல் தாகூர் (Shardul Thakur):
SHARDUL STRIKES! 🔥
The dangerous #AbhishekSharma falls into the trap as he gets caught at fine leg off #ShardulThakur’s clever delivery!
Watch LIVE action: https://t.co/f9h0ie1eiG #IPLonJioStar 👉 #SRHvLSG | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/hx4H3wO2EN
— Star Sports (@StarSportsIndia) March 27, 2025