SRH Vs LSG | IPL 2025 | Match 7 (Photo Credit: @IPL X)

மார்ச் 27, ஹைதராபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 கிரிக்கெட் (TATA IPL 2025 T20 Cricket) போட்டித்தொடரில், இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Sunrisers Hyderabad Vs Lucknow Super Giants) அணிகள் மோதிக்கொள்கின்றன. எல்எஸ்ஜி Vs எஸ்ஆர்எச் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் போர்ட்ஸ் தொலைக்காட்சி (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். SRH Vs LSG: ஐபிஎல் 2025: இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மோதல்; ஆட்டம் எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.! 

ஹைத்ரபாத் டாஸ் தோற்று பேட்டிங்:

இந்நிலையில், இன்று டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது. இதனால் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்கிறது. இமாலய இலக்குகளை நிர்ணயம் செய்வதில் வல்லவர்களாக ஹைதராபாத் அணியினர், இன்று 300 ரன்கள் என்ற இலக்கை அடைவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹைதராபாத் எதிர் லக்னோ (SRH Vs LSG Cricket IPL 2025)

இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சார்பில் ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த், டேவிட் மில்லர், ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், திக்வேஷ் சிங் ஆகியோர் விளையாடுகின்றனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் தலைவர், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ், சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி ஆகியோர் விளையாடுகின்றனர்.

லக்னோ அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு: