Devdutt Padikkal: படிக்கலை பாய்ந்து கேட்ச் பிடித்து வெளியேற்றிய ருத்ராஜ் கெய்க்வாட்: ஆர்சிபி இரண்டாவது விக்கெட் காலி.!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்றைய சென்னை எதிர் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், படிக்கல் விக்கெட் ருத்ராஜ் கைகளில் பறிபோனது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடருங்கள்.

Devdutt Padikkal: படிக்கலை பாய்ந்து கேட்ச் பிடித்து வெளியேற்றிய ருத்ராஜ் கெய்க்வாட்: ஆர்சிபி இரண்டாவது விக்கெட் காலி.!
Ruturaj Takes Padikkal Wicket (Photo Credit: @anukhaliya X)

மார்ச் 28, சென்னை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று 8 வது ஆட்டம், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Chennai Super Kings Vs Royal Challengers Bangalore) அணிகள் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடவுள்ளது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil), ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) பக்கத்தில் நேரலையில் காணலாம். Phil Salt Wicket: மின்னல் வேக நாயகனின் மெகா சம்பவம்; பில் சால்ட் விக்கெட் காலி.! 

சால்ட் விக்கெட் இழப்பு:

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், பௌலிங் தேர்வு செய்தார். இந்நிலையில், தொடக்கத்தில் களமிறங்கிய ஆர்சிபி அணியின் வீரர் பில் சால்ட் (Phil Salt), 16 பந்துகளில் 32 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். 5.0 வது ஓவரில், நூர் அகமத் (Noor Ahmad) பந்துவீச்சின்போது, நொடிக்கும் குறைவான நேரத்தில், தோனியின் மின்னல் வேக செயல்பாடு காரணமாக விக்கெட் இழந்தார். பின் களத்தில் இருந்த படிக்கல் 14 பந்துகளில் 27 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். அஸ்வினின் பந்துவீச்சில், 7.5 வது ஓவரில், அஸ்வினின் பந்தை எதிர்கொண்ட படிக்கல், ருத்ராஜிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்து வெளியேறினார்.

பில் சால்ட் விக்கெட் காலி:

படிக்கல் விக்கெட் பறிபோனது:

(The above story first appeared on LatestLY on Mar 28, 2025 08:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).