மார்ச் 28, சென்னை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று 8 வது ஆட்டம், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Chennai Super Kings Vs Royal Challengers Bangalore) அணிகள் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடவுள்ளது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil), ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) பக்கத்தில் நேரலையில் காணலாம். CSK Vs RCB Toss Update: டாஸ் வென்று சென்னை அணி பௌலிங்.. இன்று வெற்றி யாருக்கு? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.!
சால்ட் விக்கெட் இழப்பு:
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், பௌலிங் தேர்வு செய்தார். இதனால் ரஜத் படிதார் தலைமையிலான கிரிக்கெட் அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், தொடக்கத்தில் களமிறங்கிய ஆர்சிபி அணியின் வீரர் பில் சால்ட் (Phil Salt), 16 பந்துகளில் 32 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். 5.0 வது ஓவரில், நூர் அகமத் (Noor Ahmad) பந்துவீச்சின்போது, கிரீஸில் இருந்து வெளியே இருந்த பில் சால்ட், நொடிக்கும் குறைவான வேகத்தில் விக்கெட்டை இழந்தார். தோனி தனது மின்னல் வேக செயல்பாடு காரணமாக விக்கெட் எடுத்து அசத்தினார்.
பில் சால்ட் விக்கெட் காலி:
Stumping from MS Dhoni 🔥
Phil Salt gone.#CSKvsRCB #Ipl2025 pic.twitter.com/kqWcT603Eo
— Vishal Gajjar (@Vgajjar30) March 28, 2025
சால்ட் அசத்தல் ஆட்டம்:
Short & punished rightfully! 💪🏻#PhilSalt is off to a flyer as he finds the first MAXIMUM of this clash! ❤️
Watch LIVE action ➡ https://t.co/MOqwTBm0TB#IPLonJioStar 👉 #CSKvRCB | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 3 & JioHotstar! pic.twitter.com/1DGoS0vyXR
— Star Sports (@StarSportsIndia) March 28, 2025
பில் சால்ட் விக்கெட் பறிபோன காட்சி:
Ladies & gentlemen, presenting the GEN GOLD who never gets OLD! ⚡🔥#MSDhoni pulls off yet another lightning-fast stumping and this time, it's #PhilSalt who’s left stunned! 😮💨💪🏻
Watch LIVE action ➡ https://t.co/MOqwTBm0TB#IPLonJioStar 👉 #CSKvRCB | LIVE NOW on Star Sports… pic.twitter.com/kK3B5jxhXT
— Star Sports (@StarSportsIndia) March 28, 2025