மார்ச் 28, சென்னை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று 8 வது ஆட்டம், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Chennai Super Kings Vs Royal Challengers Bangalore) அணிகள் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடவுள்ளது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil), ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) பக்கத்தில் நேரலையில் காணலாம். Phil Salt Wicket: மின்னல் வேக நாயகனின் மெகா சம்பவம்; பில் சால்ட் விக்கெட் காலி.!
விராட் கோலி விக்கெட் இழப்பு:
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், பௌலிங் தேர்வு செய்தார். இந்நிலையில், தொடக்கத்தில் களமிறங்கிய ஆர்சிபி அணியின் வீரர் பில் சால்ட் (Phil Salt), 16 பந்துகளில் 32 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். 5.0 வது ஓவரில், நூர் அகமத் (Noor Ahmad) பந்துவீச்சின்போது, நொடிக்கும் குறைவான நேரத்தில், தோனியின் மின்னல் வேக செயல்பாடு காரணமாக விக்கெட் இழந்தார். பின் களத்தில் இருந்த படிக்கல் 14 பந்துகளில் 27 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். அஸ்வினின் பந்துவீச்சில், 7.5 வது ஓவரில், அஸ்வினின் பந்தை எதிர்கொண்ட படிக்கல், ருத்ராஜிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்து வெளியேறினார். அதனைத்தொடர்ந்து, விராட் கோலி 31 பந்துகளில் 30 ரன்கள் அடித்து வெளியேறினார். 12.2 வது ஓவரில் நூர் அகமது பந்துவீசியில், ரச்சினிடம் கேட்ச் அவுட் கொடுத்து வெளியேறினார். போட்டியின்போது பத்திரானா பலமுறை பந்தை பவுன்ஸ் போல போட்ட நிலையில், அது விராட் கோலியின் ஹெல்மட்டை குறைவைத்தது. ஒருகட்டத்துக்கு மேல் விராட் சிக்ஸ், போர் விளாசினார்.
பில் சால்ட் விக்கெட் காலி:
Stumping from MS Dhoni 🔥
Phil Salt gone.#CSKvsRCB #Ipl2025 pic.twitter.com/kqWcT603Eo
— Vishal Gajjar (@Vgajjar30) March 28, 2025
படிக்கல் விக்கெட் பறிபோனது:
Devdutt Padikkal gone for 27 off 14.#CSKvRCB #IPL2025 #RCBvsCSK pic.twitter.com/4DT0S9P08L
— ANU..🇱🇷 (@anukhaliya) March 28, 2025
விராட் கோலி விக்கெட் இழப்பு:
Match 8. WICKET! 12.2: Virat Kohli 31(30) ct Rachin Ravindra b Noor Ahmad, Royal Challengers Bengaluru 117/3 https://t.co/I7maHMwxDS #CSKvRCB #TATAIPL #IPL2025
— IndianPremierLeague (@IPL) March 28, 2025