MI Vs DC Women's WPL 2025 Highlights: ரசிகர்களின் இதயங்களை பதறவைத்து டெல்லி அணி திரில் வெற்றி.. வர்மா அசத்தல் ஆட்டம்.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போல, இறுதி வரை பரபரப்பை எடுத்துச் சென்ற மும்பை - டெல்லி பெண்கள் அணிக்கு இடையேயான பெண்கள் பிரீமியர் லீக் 2025 டி20 ஆட்டத்தில், டெல்லி அணி இறுதியில் வெற்றி அடைந்தது.

MI Vs DC Women's WPL 2025 Highlights: ரசிகர்களின் இதயங்களை பதறவைத்து டெல்லி அணி திரில் வெற்றி.. வர்மா அசத்தல் ஆட்டம்.!
Match 2: MI Vs DC Women's WPL 2025 (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 15, வதோதரா (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) கிரிக்கெட் போட்டியில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் டெல்லி பெண்கள் கிரிக்கெட் அணி - மும்பை பெண்கள் கிரிக்கெட் அணி (Delhi Capitals Vs Mumbai Indians Women's T20 WPL 2025) இடையே நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி செயலியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும் நேரலையில் பார்க்கலாம். முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி களமிறங்கியது. MI Vs DC WPL 2025: வெளுத்துவாங்கிய ஹர்மன்ப்ரீத், நடாலி.. டெல்லி அணிக்கு 165 ரன்கள் இலக்கு.! 

டெல்லி அணி அசத்தல் வெற்றி:

டெல்லி அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் கேப்டன் மெக் 19 பந்துகளில் 15 ரன்னும், சைப்லி வர்மா (Shafali Verma) 18 பந்துகளில் 43 ரன்னும், அனபெல் 10 பந்துகளில் 13 ரன்னும், அலிஸ் 18 பந்துகளில் 16 ரன்னும், நிகி பிரசாத் (Nki Prasad) 33 பந்துகளில் 35 ரன்னும், சாரா ப்ரைஸ் 10 பந்துகளில் 21 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். இறுதியில் ராதிகா, அருந்ததி ஜோடி களத்தில் இருந்தபோது, அணிக்கு வெற்றி கிடைக்குமா? என்ன நடக்கப்போகிறது? என்ற பதைபதைப்பு இருந்தது. ஆண்கள் டி20 பிரிவில் சென்னை அணி எளிதாக கிடைக்கும் வெற்றியைக்கூட கடைசி பந்துவரை எடுத்துச்சென்று ரசிகர்களின் மனதை பதறவைத்து வெற்றி அடையும். அதேபோல, சுவாரசியம் டெல்லி அணியால் இன்று நிகழ்த்தப்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அருந்ததி ரெட்டி (Arundhati Reddy) 1 பந்தில் 2 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

சப்னிம் இஸ்மாயில் அசத்தல் பவுலிங்:

ச. வர்மா (Shafali Verma) வெளுத்து வாங்கிய காட்சிகள்:

(The above story first appeared on LatestLY on Feb 15, 2025 11:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).