பிப்ரவரி 15, வதோதரா (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) கிரிக்கெட் போட்டியில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் டெல்லி பெண்கள் கிரிக்கெட் அணி - மும்பை பெண்கள் கிரிக்கெட் அணி (Delhi Capitals Vs Mumbai Indians Women's T20 WPL 2025) இடையே நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி செயலியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும் நேரலையில் பார்க்கலாம். RCB Sneh Rana: பெண்கள் பிரீமியர் லீக்.. பெங்களூர் அணியில் மாற்றம்.. காயத்தால் முக்கிய வீராங்கனை விலகல்.! 

மும்பை அணி 164 ரன்கள் குவிப்பு:

இந்நிலையில், முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் விளையாடிய யாஸ்திகா பாட்டியா 9 பந்துகளில் 11 ரன்னும், நடலி பர்ண்ட் (Natalie Sciver Brunt) 59 பந்துகளில் 80 ரன்னும், ஹர்மன் பிரீத் கவுர் (Harmanpreet Kaur) 22 பந்துகளில் 42 ரன்னும், அமெலியா கெர் 9 பந்துகளில் 9 ரன்னும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். 19.1 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 164 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி களமிறங்கவுள்ளது.

22 பந்துகளில் 42 ரன்கள் குவித்து அசத்திய ஹர்மன்பிரீத்:

முதல் ஓவரிலேயே ஹாய்லே (Hayley Matthews) விக்கெட்டை தூக்கிய அணியினர்: