Chris Green Suspended: சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர் போட்டியில் விளையாட தடை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

மைதானத்தில் தனது ஒழுங்கீன செயலை வெளிப்படுத்திய தேசிய அளவிலான கிரிக்கெட் வீரருக்கும், அதற்கு பதில் செயல்பாடுகளை வெளிப்படுத்திய சர்வதேச அளவிலான ஆட்டக்காரருக்கும் ஆஸி.,யில் தடை விதிக்கப்பட்டது.

Chris Green Suspended: சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர் போட்டியில் விளையாட தடை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Chris Green (Photo Credit: @LatestLY X)

பிப்ரவரி 02, சிட்னி (Sports News): கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 போட்டிகள் நடைபெற்றன. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சார்பில் விளையாடிய வீரர்களில், அறிமுக வீரராக க்றிஸ் க்ரீன் களமிறக்கப்பட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து, இவர் ஆஸ்திரேலிய அளவிலான பல்வேறு போட்டிகளில் இடம்பெற்று வருகிறார்.

கிறிஸ் கிரீன் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தின்போது, மைதானத்தில் மற்றொரு கிரிக்கெட் வீரரிடம் தகராறை ஏற்படுத்தி, மைதானத்தின் வளாகத்தில் சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்டார். இதனால் அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் குவிந்து வந்தன. Kanyakumari Shocker: 16 வயது சிறுமியுடன் குடித்தனம் நடத்திய 19 வயது இளைஞர்; இன்ஸ்டா காதலால், இன்ஸ்டன்ட் போக்ஸோ..! 

இந்நிலையில், தற்போது க்றிஸ் கிரீன் அடுத்த 1 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரை தாக்க வந்த விளையாட்டு வீரர் லூக் ஹோட்ஜஸ் அடுத்த 3 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. லூக் மீது தவறு இருப்பினும், கிரீன் எதிர்ப்பு வினையாற்றியதால் அவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Mar 02, 2024 03:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).