IND Vs ENG: இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி.. இந்திய அணி பந்துவீச்சு.!

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 முதல் ஆட்டத்தில், இந்திய அணி பந்துவீசுகிறது.

IND Vs ENG: இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி.. இந்திய அணி பந்துவீச்சு.!
IND Vs ENG T20I 2025 (Photo Credit: @BCCI X)

ஜனவரி 22, ஈடன் கார்டன் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து (Team England) கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் (IND Vs ENG T20i Series 2025), 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (IND Vs ENG ODI Series 2025) கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த போட்டிகளில் டி20 பிரிவில் முதல் ஆட்டம் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. Republic Day Speech in Tamil: குடியரசு தின பேச்சுப் போட்டியில் கலந்துக் கொள்ள போறீங்களா? உங்களுக்கான கட்டுரை இதோ.! 

இந்தியா (Team India Squad) & இங்கிலாந்து அணி (Team England Squad) வீரர்கள் விபரம்:

நடப்பு டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டானாக சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav), துணை கேப்டனாக அக்சர் படேல் (Axer Patel) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியின் சார்பில் இன்றைய போட்டியில் பி சால்ட், பி டக்கெட், ஜே பட்லர், ஜே பெத்தேல், எல் லிவிங்ஸ்டோன், எச் புரூக், ஜே ஓவர்டன், ஜி அட்கின்சன், ஜே ஆர்ச்சர், ஏ ரஷித், எம் வூட் ஆகியோர் களமிறங்குகின்றனர். இந்திய அணியின் சார்பில் முதல் டி20 போட்டியில் எஸ் சாம்சன், ஏ சர்மா, டி வர்மா, எஸ் யாதவ், எச் பாண்டியா, ஆர் சிங், என்கே ரெட்டி, ஏ படேல், ஏ சிங், வி சக்ரவர்த்தி, ஆர் பிஷ்னோய் ஆகியோர் களமிறங்குகின்றனர். இதனிடையே, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, இந்திய அணி பந்துவீச்ச தயாராகி இருக்கிறது.

இப்போட்டிகளை நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஓடிடியில் டிஸ்னி ஹாட் ஸ்டார் (Disney Hotstar) பக்கங்களில் நேரலையில் பார்க்கலாம்.

இந்திய அணி பந்துவீச்சு (Toss News from the Eden Gardens):

இந்திய அணியின் சார்பில் களமிறங்கும் வீரர்கள் குறித்த அறிவிப்பு:

(The above story first appeared on LatestLY on Aug 18, 2415 05:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).