ஜனவரி 22, புதுடெல்லி (New Delhi): ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் (Republic Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியாவில் அரசியலமைப்பு (Constitution of India) நடைமுறைக்கு வந்ததை குறிக்கிறது. குடியரசு தினம் 2025 (Republic Day 2025) கொண்டாட்டத்தின் கருப்பொருள் வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் இந்தியா - ஜனநாயகத்தின் தாய் ஆகும். இந்தியா தனக்கான சட்டங்களை இயற்றி அதை செயல் ஆக்கத்திற்கு கொண்டு வந்த நாளே குடியரசு தின நாள் ஆகும்.
குடியரசு தினத்தின் வரலாறு (Republic Day History):
டிசம்பர் 12 1946 ஆம் ஆண்டு நிரந்தர அரசியல் அமைப்பை உருவாக்க பி ஆர் அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar) தலைமையில் வரைவு குழு உருவானது நவம்பர் 4 1947 இல் அரசியலமைப்பு ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பின் எழுதி முடிக்கப்பட்டது. இறுதியாக ஜனவரி 24 1950ல் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று ஜனவரி 26 1950ல் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதை அன்றிலிருந்து இன்று வரை குடியரசு நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. Duplicate Land Documents: சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டதா? உடனே இதை பண்ணுங்க..!!
குடியரசு தின அணிவகுப்பு (Republic Day Parade in Delhi):
நாட்டின் தலைநகரமான புது டெல்லி ராஜ்பாத்தில் இந்திய பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றி நாட்டை காத்து மறைந்த இந்திய வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, முப்படையினரின் அணிவகுப்பையும் இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களின் அணிவகுப்பையும் பார்வையிடுவார். அதேபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில ஆளுநர் கொடியேற்றி மாநில காவலர்களின் அணிவகுப்பை பார்வையிடுவார். அந்த வகையில், வாகன அணிவகுப்பில் இந்தாண்டு ஆந்திர பிரதேசம், பீகார், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் கலந்துகொள்ளுகிறது. மேலும் 11 மத்திய அரசின் குழுக்களும் பங்கேற்கின்றன.
பொற்கால இந்தியா: பாரம்பரியம் மற்றும் மேம்பாடு (Swarnim Bharat: Virasat aur Vikas) என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. குடியரசு தின அணிவகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களின் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிப்பளிக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாகன அணிவகுப்பு நடைபெறும். மேலும் கடந்த ஆண்டு நாட்டிற்காக சேவை புரிந்தவர்களுக்கு முக்கிய விருதுகளும் வழங்கப்படும்.
(Republic Day 2025 Speech):
மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள், பெற்றோர், என்னுடைய சக மாணவர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நாம் இங்கு நாட்டின் 76வது குடியரசு தினத்தை கொண்டாட கூடியிருக்கிறோம். இந்தியா ஒரு குடியரசாக மாறிய நாள் இந்த நாள். எனவே இந்நாள் இந்திய தேசத்திலும் வாழ்விலும் முக்கிய நாளாகும். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களை நினைவு கூறும் சிறப்பு உடைய நாள் ஆகும். Black Turmeric Cultivation: மஞ்சளிலேயே செல்வம் சேர்க்கும் கருப்பு மஞ்சள்.. வளர்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து இந்தியா முழுவதும் விடுபட்டு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. அதற்காக பல தலைவர்கள் வீரர்கள் உயிரினை இழந்தனர். இருப்பினும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் மன உறுதியினாலும் அர்ப்பணிப்பு நாளும் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட ஒரு நாடாக அமைந்ததாக கொண்டாடும் நாள் தான் இந்த குடியரசு தினம்.
குடியரசு என்றால் மக்களாட்சி என்றும் பொருள் படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சி செய்யும் முறையை குடியரசு ஆட்சி முறையாகும். ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபை தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரை சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார். Republic Day 2025: 76-வது இந்திய சுதந்திர தினம்: ராஜ்பாத் கொண்டாட்டம், வாழ்த்துச்செய்தி.. விபரம் இதோ.!
டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சாசனம் எழுதப்பட்டது. இது மக்களாட்சி குறிக்கோளாக கொண்டு நிறைவேற்றப்பட்டது. இதன்பின் 1950ஆம் ஆண்டு முதல் இந்திய குடியரசு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1929 ஆம் ஆண்டு லாகூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் அனைத்து தலைவர்காளும் பூரண சுயராஜ்யம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின் காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான உருவாக்கபட்டதன் அடைப்படையில் முதற்கட்டமாக சுகந்திர நாளாக கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது.
உண்மையான குடிமகனாக இருந்து குடியரு தினத்தை கொண்டாடுவோம்..! ஜெய்ஹிந்த்! ஜெய் பாரத்!