Ultimate Table Tennis 2024: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர்.. சென்னையில் இன்று தொடக்கம்..!

8 அணிகள் கலந்து கொள்ளும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது.

Ultimate Table Tennis 2024: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர்.. சென்னையில் இன்று தொடக்கம்..!
UTT (Photo Credit: @UltTableTennis X)

ஆகஸ்ட் 22, சென்னை (Sports News): அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (Ultimate Table Tennis) தொடரின் 6வது சீசன் சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் அகமதாபாத் எஸ்.ஜி.பைப்பர்ஸ், சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி, கோவா சேலஞ்சர்ஸ், ஜெய்பூர் பேட்ரியாட்ஸ், பெங்களூரு ஸ்மேஷர்ஸ், புனேரி பல்தான் டிடி, யு மும்பா டிடி என மொத்தம் 8 அணிகள் களமிறங்குகின்றன. இந்த சீசனில் அகமதாபாத், ஜெய்பூர் அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 17 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 16 சர்வதேச வீரர்கள் உட்பட மொத்தம் 48 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். PAK Vs BAN Test Series Live Telecast: பாகிஸ்தான்-பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டி நேரலையில் எப்படி பார்ப்பது..?

இந்த 8 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெறுகின்றன. ஒரு அணி தனது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். மேலும் எதிர் பிரிவில் உள்ள ஏதேனும் இரு அணிகளுடன் தலா ஒரு முறை பலப்பரீட்சை நடத்தும். இந்த வகையில் ஒவ்வொரு அணியும் 5 மோதலில் விளையாடும். லீக் சுற்றில் மொத்தம் 20 மோதல்கள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் 2 ஆண்கள் ஒற்றையர் ஆட்டங்கள், 2 மகளிர் ஒற்றையர் ஆட்டங்கள் மற்றும் 1 கலப்பு இரட்டையர் ஆட்டம் என மொத்தம் 5 ஆட்டங்கள் நடத்தப்படும். இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதி ஆட்டங்கள் செப். 5, 6 தேதிகளில் நடக்க உள்ளன. இறுதிப் போட்டி செப்.7ல் நடைபெற உள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 22, 2024 02:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).