ஆகஸ்ட் 21, ராவல்பிண்டி (Sports News): பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் (PAK Vs BAN) மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஆகஸ்ட் 21) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஐ.சி.சி. சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ICC WTC 2023-25) தொடர் நடத்தப்படுகிறது. Will Jay Shah Become Next ICC Chairman?: ஐசிசி தலைவர் பார்க்லேவின் பதவிக்காலம் நிறைவு.. அடுத்த தலைவராகும் ஜெய்ஷா..!
இதுவரை நடந்த போட்டி முடிவில் இந்தியா (68.52), ஆஸ்திரேலியா (62.50) ஆகிய அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன. இதில், பாகிஸ்தான் அணி (36.66) 6வது இடம் மற்றும் வங்கதேச அணி (25.00) 8வது இடத்தில் இருக்கின்றன. இந்நிலையில், வங்கதேசம் அணி இரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான்-பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டி (PAK Vs BAN 1st Test) இன்று (ஆகஸ்ட் 21, 2024) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டி இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படாது. தற்போதைய நிலவரப்படி, மழைக்காரணமாக போட்டி தாமதமாக தொடங்க உள்ளது.