AUS Vs SA 2nd ODI: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி.. நாளை பழி தீர்க்குமா ஆஸ்திரேலியா..?

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS Vs SA ODI) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 22) மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

AUS Vs SA 2nd ODI: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி.. நாளை பழி தீர்க்குமா ஆஸ்திரேலியா..?
AUS Vs SA 2nd ODI (Photo Credit: @cricradarin X)

ஆகஸ்ட் 21, மெக்கே (Sports News): தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளையும், இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கும். மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம். நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன்மூலம், தென்னாப்பிரிக்கா அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. Chepauk Stadium: சேப்பாக்கம் மைதானத்தில் புனரமைப்பு பணிகள் தீவிரம்.. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வீடியோ வெளியீடு..!

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (Australia Vs South Africa):

இந்நிலையில், ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா (AUS Vs SA) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 22) மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் தொடர் சமனில் இருக்கும். எனவே, இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 111 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஆஸ்திரேலியா அணி 51 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணி 56 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகளுக்கு முடிவில்லை. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மார்னஸ் லாபுசேன், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, ஆரோன் ஹார்டி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், மேத்யூ குஹ்னெமன், சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனொலி.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:

ஐடன் மார்க்ரம், ரியான் ரிகெல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் பிரெவிஸ், வியான் முல்டர், கேஷவ் மகாராஜ், பிரெனலன் சுப்ரயன், நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி, கார்பின் போஷ், டோனி டி சோர்சி, செனுரான் முத்துசாமி, க்வேனா மபாகா, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்.

(The above story first appeared on LatestLY on Aug 21, 2025 03:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).