ஆகஸ்ட் 20, சென்னை (Sports News): சென்னை, சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் (M. A. Chidambaram Stadium) மைதானத்தில், தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மைதானத்தில் மேம்பட்ட வசதிகளுடன் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மைதானத்தின் தரைப்பரப்பு முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டு, புதிய புல்வெளி அமைக்கப்படவுள்ளது. சீரமைப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக, சில மாதங்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் எந்த ஒரு போட்டியும் நடைபெறாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 2026, ஜூன் மாதம் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை, ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஆடுகளம் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்த வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. Women's World Cup 2025 India Squad: மகளிர் உலகக் கோப்பை 2025; இந்திய மகளிர் அணி அறிவிப்பு..!
வீடியோ இதோ:
With every effort and every sound, Chepauk prepares for its next chapter. 🏟️🏏#TNCA #TamilNaduCricket #ChepaukStadium #TNcricket pic.twitter.com/htD1hjaJlm
— TNCA (@TNCACricket) August 19, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)