AUS Vs SA 3rd ODI: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா 3வது ஒருநாள் போட்டி.. ஆறுதல் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா..?

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS Vs SA ODI) அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி, நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24) மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

AUS Vs SA 3rd ODI (Photo Credit: @dhoni113chennai X)

ஆகஸ்ட் 22, மெக்கே (Sports News): தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளையும், இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கும். மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம். நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. AUS Vs SA 2nd ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. தென்னாப்பிரிக்கா தொடரை கைப்பற்றி அசத்தல்..!

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (Australia Vs South Africa):

இந்நிலையில், ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா (AUS Vs SA) அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24) மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில், ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே தொடரை இழந்த நிலையில், ஆறுதல் வெற்றி பெற போராடும். அதே சமயம் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று வொயிட் வாஷ் செய்ய முயற்சிக்கும். இதனால், இப்போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 112 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஆஸ்திரேலியா அணி 51 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணி 57 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகளுக்கு முடிவில்லை. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மார்னஸ் லாபுசேன், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், மேத்யூ குஹ்னெமன், பென் டுவார்ஷுயிஸ், கூப்பர் கோனொலி.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:

ஐடன் மார்க்ரம், ரியான் ரிகெல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி சோர்சி, மேத்யூ பிரீட்ஸ்கே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் பிரெவிஸ், வியான் முல்டர், கேஷவ் மகாராஜ், செனுரான் முத்துசாமி, நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி, கார்பின் போஷ், பிரெனலன் சுப்ரயன், க்வேனா மபாகா, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement