WI Vs PAK 1st ODI, Toss (Photo Credit: @heyviplive1 X)

ஆகஸ்ட் 08, டிரினிடாட் (Sports News): பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த டி20 தொடரில், பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஆகஸ்ட் 08) டிரினிடாட்டில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. ZIM Vs NZ 2nd Test, Day 2: நியூசிலாந்து நிலைத்து நின்று அதிரடி ஆட்டம்.. 476 ரன்கள் முன்னிலை..!

வெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (West Indies Vs Pakistan):

இந்நிலையில், பாகிஸ்தான் டி20 தொடரை வென்ற உத்வேகத்துடன் களமிறங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் (WI Vs PAK) அணிகள் இதுவரை 137 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணி 71 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 63 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் (பிளேயிங் லெவன்):

பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கீசி கார்டி, ஷாய் ஹோப் (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், குடாகேஷ் மோட்டி, ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ், ஜெடியா பிளேட்ஸ். WI Vs PAK 1st ODI: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி.. நாளை தொடக்கம்..!

பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்):

அப்துல்லா ஷபீக், சைம் அயூப், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் ஆகா, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, சுபியான் முகீம்.