BAN Vs PAK 3rd T20I: வங்கதேசம் - பாகிஸ்தான் 3வது டி20.. ஆறுதல் வெற்றி பெறுமா பாகிஸ்தான்..?
வங்கதேசம் எதிர் பாகிஸ்தான் அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, நாளை (ஜூலை 24) தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஜூலை 23, தாக்கா (Sports News): பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அனைத்து போட்டிகளும், தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும். இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை ஃபேன் கோட் செயலியில் நேரலையில் பார்க்கலாம். நடந்து முடிந்த முதலாவது டி20 போட்டியில், வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில், வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. BAN Vs PAK 2nd T20I: பாகிஸ்தான் 125 ரன்னுக்கு ஆல் அவுட்.. வங்கதேச அணி அபார வெற்றி..!
வங்கதேசம் எதிர் பாகிஸ்தான் (Bangladesh Vs Pakistan):
இந்நிலையில், வங்கதேசம் - பாகிஸ்தான் (BAN Vs PAK) அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, நாளை (ஜூலை 24) தாக்காவில் நடைபெறவுள்ளது. லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி, சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 24 சர்வதேச டி20 போட்டிகளில் மோதியுள்ளன. வங்கதேச அணி 5 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 19 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி ஏற்கனவே தொடரை இழந்த நிலையில், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெரும் முனைப்புடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசம் அணி வீரர்கள்:
லிட்டன் தாஸ் (கேப்டன்), பர்வேஸ் ஹொசைன் எமன், தன்சித் ஹசன் தமீம், டவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், ஜாக்கர் அலி, மகேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, நசும் அகமது, முகமது சைபுதீன், முகமது நைம்.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
சல்மான் அலி ஆகா (கேப்டன்), சைம் அயூப், ஃபகார் ஜமான், முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ், சாஹிப்சாதா ஃபர்ஹான், குஷ்தில் ஷா, ஹுசைன் தலாத், ஃபஹீம் அஷ்ரப், அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, முகமது நவாஸ், அகமது டேனியல், சல்மான் மிர்சா, சுபியான் முகீம்.
(The above story first appeared on LatestLY on Jul 23, 2025 09:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

