SL Vs BAN 3rd T20I: இலங்கை - வங்கதேசம் 3வது டி20.. தொடரை வெல்ல போவது யார்..?
இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, நாளை (ஜூலை 16) நடைபெறவுள்ளது.
ஜூலை 15, கொழும்பு (Sports News): வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரையும், 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது. இதனையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது டி20 போட்டியில், இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டியில், வங்கதேச அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. SA Vs NZ: முத்தரப்பு டி20 தொடர்.. தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்..!
இலங்கை எதிர் வங்கதேசம் (Sri Lanka Vs Bangladesh):
இந்நிலையில், இலங்கை - வங்கதேசம் (SL Vs BAN) அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, நாளை (ஜூலை 16) கொழும்புவில் நடைபெறுகிறது. சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி, லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 19 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இலங்கை அணி 12 போட்டிகளிலும், வங்கதேச அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. எனவே, நாளை நடைபெறும் 3வது மற்றும் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால், ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இலங்கை அணி வீரர்கள்:
சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷனக, துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, சமிக கருணாரத்ன, பி நுரஷ கருணாரத்ன, எஷான் மலிங்கா.
வங்கதேச அணி வீரர்கள்:
லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், எம் நயிம், தௌஹித் ஹிரிடோய், எம் சய்புதீன், ஜேக்கர் அலி, ஷமிம் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், ஆர் ஹொசைன், எம் ஹசன், என் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், எஸ் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.
(The above story first appeared on LatestLY on Jul 15, 2025 10:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

