IND Vs AUS 3rd Test: டிராவில் முடிந்த 3வது டெஸ்ட் போட்டி; மழையால் இரு அணிகளும் முடிவு..!

பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

IND Vs AUS 3rd Test: டிராவில் முடிந்த 3வது டெஸ்ட் போட்டி; மழையால் இரு அணிகளும் முடிவு..!
AUS Vs IND 3rd Test Day 5 (Photo Credit: @cricbuzz X)

டிசம்பர் 17, பிரிஸ்பேன் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில், 3வது டெஸ்ட் (AUS Vs IND 3rd Test, Day 5) போட்டி டிசம்பர் 14ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு பிரிஸ்பேனில் உள்ள கப்பா (Gabba) மைதானத்தில் தொடங்கியது.

பாலோ ஆனை தவிர்த்த இந்தியா:

இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 117.1 ஓவர்கள் விளையாடி 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் (Travis Head) 152, ஸ்மித் (Steven Smith) 101 ரன்கள் அடித்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா (Jasprit Bumrah) 6 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தியா முதல் இன்னிங்ஸில் பாலோ ஆனை தவிக்க கேஎல் ராகுல் 84 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். ஜடேஜா 77 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இறுதியில், பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் (Akash Deep) இணைந்து 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாலோ ஆனை தவிர்த்தனர். நான்காம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறைவு பெற்றது. இந்தியா 74.5 ஓவர்கள் விளையாடி 9 விக்கெட்களை இழந்து 252 ரன்கள் அடித்திருந்தது. Ravichandran Ashwin: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு; ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிப்பு.!

மளமளவென சரிந்த விக்கெட்:

கடைசி நாளான இன்று, ஆகாஷ்தீப் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், 260 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 185 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. எனினும், மழை காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதன்பின் தொடங்கிய ஆட்டத்தில் 18 ஓவர்கள் மட்டுமே வீசப்பட, இதில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, ஆகாஷ்தீப், சிராஜ் ஆகியோர் வேகத்தில் விரைவில் விக்கெட்களை சாய்த்தனர். 89 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

டிராவில் முடிந்த போட்டி:

இதன்மூலம் இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய அணி 8 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபெற்றது. இதன்பின், மழை தொடர்ந்து பெய்ய மோசமான வானிலை காரணமாக ஆட்டத்தை கைவிடுவது இரு அணிகளும் முடிவு செய்தது. இதனையடுத்து, 3வது போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

(The above story first appeared on LatestLY on Dec 18, 2024 12:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).