SL Vs BAN 3rd ODI (Photo Credit: @liveeflstreams X)

ஜூலை 08, பல்லேகலே (Sports News): வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, முதலாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டியில், வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-1 என்ற நிலையில், 3வது ஒருநாள் போட்டி (SL Vs BAN) இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. SL Vs BAN 3rd ODI: குஷால் மென்டிஸ் அபார சதம்.. வங்கதேசம் வெற்றி பெற 286 ரன்கள் இலக்கு..!

இலங்கை எதிர் வங்கதேசம் (Sri Lanka Vs Bangladesh):

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு நிசன் 1 ரன்னில் அவுட்டானார். அடுத்து, பதும் நிசங்கா 35 ரன்னிலும், கமிந்து மென்டிஸ் 16 ரன்னிலும் நடையை கட்டினர். இதன்பிறகு, குஷால் மென்டிஸ் - கேப்டன் அசலங்கா இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. கேப்டன் அசலங்கா அரைசதம் (58 ரன்கள்) அடித்து அவுட்டானார். மறுபுறம், அதிரடியாக விளையாடிய குஷால் மென்டிஸ் சதமடித்து (124 ரன்கள்) அசத்தினார். இறுதியில், இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 285 ரன்கள் அடித்தது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 2 விக்கெட்கள், தன்சிம் ஹசன் சாகிப், தன்வீர் இஸ்லாம் மற்றும் ஷமிம் ஹொசைன் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

இலங்கை வெற்றி:

இதனையடுத்து வங்கதேச அணி 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தியது. வங்கதேச அணி 39.4 ஓவர்களிலேயே 186 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தௌஹித் ஹிரிடோய் 51 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இலங்கை அணி தரப்பில், துஷ்மந்த சமீர மற்றும் அசித்த பெர்னாண்டோ தலா 3, துனித் வெல்லலகே மற்றும் வனிந்து ஹசரங்க தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இலங்கை அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இலங்கை (பிளேயிங் லெவன்):

நிஷான் மதுஷ்க, பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா (கேப்டன்), ஜனித் லியனகே, துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்க, மஹீஸ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, அசித்த பெர்னாண்டோ.

வங்கதேசம் (பிளேயிங் லெவன்):

பர்வேஸ் ஹொசைன் எமன், தன்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தௌஹித் ஹிரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ் (கேப்டன்), ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி, தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் சாகிப், தன்வீர் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்.