IND Vs NZ 1st Test: பெங்களூரில் கனமழை; இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து..!
பெங்களூருவில் கனமழை காரணமாக இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
அக்டோபர் 16, பெங்களூரு (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவிற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து (IND Vs NZ 1st Test, Day 1) இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் (Bengaluru) உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று (அக்டோபர் 16) தொடங்குவதாக இருந்தது. Women's T20 WC 2024: மகளிர் டி20 உலககோப்பை.. அரைஇறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி..!
இதனிடையே, போட்டி நடைபெறும் இடத்தில் போட்டி தொடங்கும் முன்பே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை (Heavy Rain) காரணமாக இந்தப் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று காலை 9 மணிக்கு போட்டி தொடங்க இருந்த நிலையில், மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழையின் காரணமாக தற்போது இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Oct 16, 2024 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

